இந்தியா

“செலவுக்கு பணம் தரவில்லை..” : நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - விசாரணையில் ‘பகீர்’!

சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாயையே, மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“செலவுக்கு பணம் தரவில்லை..” : நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - விசாரணையில் ‘பகீர்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் சேர்ந்தே இருவரும் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அர்ச்சனா நெடுரோட்டில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அர்ச்சனாவை அவரது மகள் யுவிகா ரெட்டியும் இரண்டாவது கணவர் நவீன்குமாரும் சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அர்ச்சனா தன்னைவிட பத்து வயது இளையவரான நவீன்குமாரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து நவீன்குமாருக்கும், முதல் கணவருக்குப் பிறந்த யுவிகா ரெட்டிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டு பேரையும் அர்ச்சனா கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களின் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர்களின் செலவுகளுக்கான பணத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமாரும், மகள் யுவிகா ரெட்டியும் சேர்ந்து அர்ச்சனாவை கொலை செய்ய திட்டம்போட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் நண்பர்கள் உதவியுடன் அர்ச்சனா ரெட்டியை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நவீன்குமார், யுவிகா ரெட்டி உட்பட ஏழு பேரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories