Tamilnadu
“திருநங்கையாக மாறிய மகனை திட்டம் போட்டு கொலை செய்த தாய்” : போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல் !
சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் உமாதேவி. இவரது மகன் நவீன்குமார். இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி அக்ஷிதா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், தீபாவளிக்குச் சொந்த ஊர் வந்து குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் நவீன்குமார் காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ஊர் மக்கள் அவரை மீட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நவீன்குமாரின் தாய் உமாதேவியின் மீது சந்தேகமடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காமல் தாய் உமாதேவி அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரின் உதவியுடன் நவீன்குமாரை அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உமாதேவி, கார்த்திகேயன், சந்தோஷ், வெங்கடேஷ், காமராஜ், சிவக்குமார் ஆயோரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!