தமிழ்நாடு

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.. நடந்தது என்ன?

மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45). இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு வரலட்சுமி (20), நந்தினி (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்று விட்டார். அவரது தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். தாய் கீதா கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அறைக்குள் சென்ற நந்தினி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை, கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து மாங்காடு போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.. நடந்தது என்ன?

மேலும் நந்தினி எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது போன்று எழுதி வைத்து இருந்தார். மேலும் டீச்சர், ரிலேஷன்ஸ் நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும் என உருகமாக எழுதியுள்ளார்.

மேலும் தற்கொலைக்கான காரணம் பாலியல் அத்து மீறல் என்றும் தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பது குறித்து குறிப்பிடாமல் வைத்திருந்தார். இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அந்த மாணவியின் நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோரிடம் மங்காடு போலிஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து நிலையில், அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றி அந்த செல்போனில் அவர் யாரிடமெல்லாம் அதிகமாகப் பேசினார் என்பது குறித்து பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4 பேரை பிடித்து தீவிரமாக விடிய விடிய விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21), என்பவர் அதிகமாக அந்த மாணவிக்கு செல்போனில் ஆபாச தகவல்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷிடம் விசாரணை செய்தனர்.

விக்னேஷ் குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஈ.சி.ஈ மூன்றாமாண்டு படித்து வருகிறார். அந்த மாணவியை விக்னேஷ் காதலித்து வந்ததாகவும் தற்போது விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.. நடந்தது என்ன?

மாணவி விக்னேஷிடம் பேச்சை குறைத்துக்கொண்ட நிலையில், மாணவிக்கு ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி உள்ளார். மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் செல்போனில் இருந்த தகவல்களின் அடிப்படையில் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்தில் அந்த மாணவியின் செல்போனை மேலும் தீவிரமாக போலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அந்த மாணவி கடிதத்தில் உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்ததால் உறவினர்கள் தரப்பில் இருந்து யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

banner

Related Stories

Related Stories