Tamilnadu
அடுத்தடுத்து 4 மாவட்டத்தில் செயின் பறிப்பு.. கொள்ளையனை காட்டிக் கொடுத்த ஒற்றை புகைப்படம் - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கானங்கொல்லை கிராமத்தில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
இது குறித்து திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மர்ம நபரைத் தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், பழைய குற்றவாளியின் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பார்த்த போது புதுச்சேரியைச் சேர்ந்த விஜி என்ற குற்றவாளிதான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை செய்து செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரே மாதத்தில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் விஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!