தமிழ்நாடு

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. போக்சோ வழக்கில் சிறையில் அடைத்த காவல்துறை!

பொன்னமராவதி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை இளைஞரை போக்சோ வழக்கில் கைது செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த  இளைஞர்.. போக்சோ வழக்கில் சிறையில் அடைத்த காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில் அதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி 16 வயது சிறுமியை போலிஸார் இன்று மீட்டனர். பின்னர் திருமயம் காவல் ஆய்வாளர் சிமியிடம் விசாரணை நடத்தியதில், வார்பட்டு கிராமம் பாரி நகரைச் சேர்ந்த கணேசன் தன்னை அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெண் அளித்த வாக்குமூலத்தின் படி, கணேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கணேசனை திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் இந்திராகாந்தி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலிஸார் கணேசனை அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories