Tamilnadu
“கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி” : கடலூரில் நடந்த சோகம்!
கடலூர் மாவட்டம், தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி மணிகண்டன் வயலில் வேலை பார்ப்பவர்களுக்குச் சேர்ந்து மதிய உணவு தயாரிக்க வேண்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனலட்சுமி மதிய உணவிற்குச் சூடாக சாம்பார் மற்றும் சாதம் தயார் செய்து சமையல் அறையில் வைத்திருந்தார்.
பின்னர் குழந்தை கிருபாஸ்ரீக்காக அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையிலிருந்த குழந்தை அங்கிருந்த சாம்பார் பாத்திரத்தின் மூடியை இழுத்தபோது எதிர்பாராத விதமாக தவறி பாத்திரத்திற்குள்ளேயே விழுந்தது.
சில நிமிடத்திலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி குழந்தையை சாம்பார் பாத்திரத்திலிருந்து உடனே தூக்கினார். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் வெந்து போயிருந்தது. பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!