தமிழ்நாடு

“கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் சாலை விபத்தில் பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!

நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் சாலை விபத்தில் பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூரை சேர்ந்தவர் கிரிதரன். வயது 36. இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கிரிதரனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியை பார்ப்பதற்காக கிரிதரன் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மாம்பாக்கம் பகுதியில் பின்னால் வந்த டைலர் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது அதே லாரிதலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மேலும் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் சாலைவிபத்தில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories