Tamilnadu
“பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே மாமூல் கேட்டு மிரட்டல்” : கத்தியை காட்டி சவால் விட்ட ரவுடி கைது!
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா இவர் அதே பகுதியில் பிஸ்மில்லா என்ற பெயரில் பீப் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடைக்கு வந்த இருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் இதயத்துல்லா பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட போது கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காததால் கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர்.
மேலும் காவல்துறையால் கூட என்னை பிடிக்க முடியாது என சவால் விட்டுவிட்டு கொலை மிரட்டல் வித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இது குறித்து கடை உரிமையாளர் இதயதுல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது சென்னை கொருக்குப்பேட்டை ஜெ. ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த நாய் பல்லு அப்பு (எ) டேனியலை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி தலைமறைவாக உள்ள. லாலூ (எ) சாகுல்ஹமீது போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!