Tamilnadu

போலி பத்திரம் மூலம் பொது பாதையை அபகரித்த BJP நிர்வாகி; முதல்வர் தனிப்பிரிவில் புகாரளித்ததும் நடவடிக்கை!

சென்னை மதுரவாயில் சவுத் மாதா தெருவை சேர்ந்தவர் கராத்தே கார்த்திக். இவர் கைதி உட்பட பல வெற்றிப் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் இவர் வீட்டருகே இருக்கும் திருவள்ளுவர் மாவட்ட பாஜக விவசாய துணைத் தலைவர் வெங்கடேசன் பல வருடமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு சொந்தமான இரு நிலத்திற்கும் இடையே உள்ள பிடிபடாத பாதையை தனது மூன்று மகன்களுக்கும் வெங்கடேசன் போலி பத்திரம் மூலம் பிரித்து பத்திர பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக 1973 முதல் 2008 வரை வாங்கியவர்களின் அனைத்து பத்திரிகைகளும் பிரிக்கப்படாத வழிப்பாதை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு கராத்தே கார்த்திக்கு செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்யும் போதுதான் வெங்கடேசன் மற்றும் அவரது மூன்றாவது மகன் சுரேந்திரனும் பத்திர மோசடி செய்திருப்பது தெரிய தெரியவந்துள்ளது.

Also Read: "சிவன், விஷ்ணு இருக்கும் போது கொரோனா அண்டாது": BJP தலைவர் பேச்சால் சர்ச்சை!

இதனைத் தொடர்ந்து கராத்தே கார்த்திக் பாஜக பிரமுகர் வெங்கடேசன் சர்பதிவாளர் முத்துக்கண்ணன் வெங்கடேசனின் இரண்டு மகன்கள் நாகராஜன் சுரேந்திரன் ஆகியோர் மீது நில மோசடி, அத்துமீறி நுழைவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவின் ஆட்சி காலத்தில் மதுரவாயல் காவல் நிலையம் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகம் மற்றும் நில மோசடி தொடர்பான குற்றப்பிரிவு அலுவலகத்திற்கும் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பூந்தமல்லி நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றத்திலும் புகார் மனுவை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு வாங்கியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு கொடுத்து 30 நாட்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டதாகவும் பத்திர மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தனது ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்ததன் காரணத்தினால் 30 நாட்களில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனுவில் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு வக்காலத்து வாங்கும் எச்.ராஜா” : ரூ.600 கோடி மோசடியில் பா.ஜ.க-வுக்கு தொடர்பா?