இந்தியா

"சிவன், விஷ்ணு இருக்கும் போது கொரோனா அண்டாது": BJP தலைவர் பேச்சால் சர்ச்சை!

சிவனும், விஷ்ணுவும் இருக்கும் போது மத்திய பிரதேசத்தில் கொரோனா அண்டாது என பா.ஜ.க தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"சிவன், விஷ்ணு இருக்கும் போது கொரோனா அண்டாது": BJP தலைவர் பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தது. அப்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்தனர்.

அப்போது, கொரோனாவிடம் இருந்து மக்களைக் காப்பாற்றாமல், அவர்கள் உயிரிழப்பதை அம்மாநில முதல்வர்கள் வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக், மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் ''சிவன் '' மற்றும் '' விஷ்ணு'' இருப்பதால் மத்தியப் பிரதேசத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகாது என அறிவியலுக்கு புறம்புக பேசியுள்ளார்.

அதாவது, முதல்வர் சிவ்ராஜ் சிங்க சவுகானை சிவனாகவும், பா.ஜ.க தலைவர் விஷ்ணு தத் சர்மாவை விஷ்ணுவாகவும் குறிப்பிட்டு இவர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

"சிவன், விஷ்ணு இருக்கும் போது கொரோனா அண்டாது": BJP தலைவர் பேச்சால் சர்ச்சை!
DELL

காங்கிரஸ் தலைவர் புபேந்திர குப்தா, கட்சித் தொண்டர்களின் கைத்தட்டல் வாங்குவதற்காக இப்படியெல்லாம் பேசுவதா என கடுமையாகச் சாடியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் 3.28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது சாதாரண மரணத்தை விட 54% அதிகமாகும். பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களே 3500 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். இப்படி மக்கள் சாகும் போது சிவராஜும் விஷ்ணுவும் எங்கு இருந்தனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories