Tamilnadu

“செயல்பாடு சரியில்லாத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரிக்கை!

“செயல்பாடு சரியில்லாத ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.எம்.சி.மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன்களை திறந்துவைத்தார் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

நீண்ட காலமாக ஊராட்சி செயலர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலரது செயல்பாடு சரியில்லை எனப் புகார்கள் வருகின்றன. அவர்கள் விதிகளுக்குட்பட்டு இடமாறுதல் செய்யப்படுவர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊராட்சிகளுக்கான நிதி முறையாக வரவில்லை என்பது தெரிந்ததுதான். தற்போது அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான நிதியை வழங்கி வருகிறோம். மேலும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதியை தொடர்ந்து கேட்டுப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஆமா.. வருசத்துக்கு ஆறு கோடி சொத்து வாங்குறோம்” - எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும் வீடியோவால் அதிர்ச்சி!