Tamilnadu
“மாற்றத்தை விரும்பும் மக்கள்” : 9 மணி நிலவரம் : தமிழகம் முழுவதும் 13.80 சதவீத வாக்குகள் பதிவு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். வேலூர் காட்பாடி வாக்குச்சாவடியில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்களித்தார்.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில், திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக 20.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் 10.58 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக நெல்லையில் 9.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!