Tamilnadu
“தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.கவின் கூடாரம் காலியாகிவிடும்” : துரைமுருகன் சாடல்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் பா.ம.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தங்களை தி.மு.கவில் பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இணைத்துக்கொண்டனர்.
புதிதாக தி.மு.கவில் இணைந்தவர்களுக்கு, பொது செயலாளர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர் சந்தித்த துரைமுருகன், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரமும் சம்பித்து போனது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் செய்த இடத்தில், எட்டு திக்கிலும் இருந்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறக் கூடாது என்று தி.மு.க தோழர்களை காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்தனர்.
இதுபோன்ற கைது நடவடிக்கைகள் எடுப்பதால் தி.மு.கவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்பதின் ஒரு சாட்சியாகும்.
தமிழ்மொழி ஆர்வலர்களை வஞ்சிக்கும் வகையில் செம்மொழி ஆய்வு மையத்தை கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றுவதை இந்த அரசு தடுக்காவிட்டால், இவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லமாட்டார்கள். தலைவர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தவுடன் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் இருந்த இந்த ஆய்வு மையத்தை, தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆனால், இந்த ஆட்சியாளர்கள் அதனை திரும்பவும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல விட்டுவிட்டால், தமிழ் ஆர்வலர்கள் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு இலை உதிர் காலம் தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதிலும் இது போன்று மாற்று கட்சியினர் தி.மு.கவில் இணைந்து கொண்டுள்ளனர். தேர்தல் வரும் நேரத்தில் அ.தி.மு.கவின் கூடாரம் காலியாகி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!