தமிழ்நாடு

“உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே இனி கடைகளில் கை வைக்க முடியும்” : வணிக சங்க தலைவர் விக்கிரமராஜா ஆவேசம்!

“ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கடைகளை இடிக்க அரசின் முடிவை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்த உள்ளோம்” என வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.

“உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே இனி கடைகளில் கை வைக்க முடியும்” : வணிக சங்க  தலைவர் விக்கிரமராஜா ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அச்சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அரசு, கடைகளை இடித்து கடைகளை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இடிக்கப்பட்ட கடைகளை இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்டித்தராமல் இழுவையில் உள்ளது. இந்த நிலையை அரசு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றால், “எத்தனை மாதங்களில் கடைகள் கட்டி முடிக்கப்படும்” என்ற உத்தரவாதம் தந்தால் மட்டுமே, கடைகளில் கை வைக்க முடியும். இல்லை என்றால், அதை எதிர்த்து போராடுவதற்கு தமிழகம் முழுவதும் வியாபாரிகள் தயாராக உள்ளனர். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

“உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே இனி கடைகளில் கை வைக்க முடியும்” : வணிக சங்க  தலைவர் விக்கிரமராஜா ஆவேசம்!

மேலும், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை நாமக்கல்லில் நடைபெற உள்ளது. அது குறித்த முடிவு நாளை அக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

உணவு பொருட்களில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களில் இருந்து எடுத்ததை ஏற்கனவே ஆட்சேபனை எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு மனு அளித்திருக்கிறோம். அதை மீண்டும் அத்தியாவசிய பொருட்களில் சேர்க்க வேண்டும்.

மழையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் எழ முடியாமல் இருக்கிறார்கள். பேரிடர் உதவி தொகையிலேயே அந்த சாமான்ய விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் பாதிக்கப்படாத வகையில் உதவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories