Tamilnadu
ஊருக்குதான் உபதேசம் போல? காஞ்சிபுரத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக கூடி கொரோனாவை பரப்பும் அதிமுகவினர்..!
கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுபடுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அ.தி.மு.க துரிதப்படித்தியுள்ளது. அதன் ஓர் பகுதியாக பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் காமராஜர் சாலையிலுள்ள ஓர் திருமண மண்டபத்தில் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புதிய இளைஞர்களை புதிய உறுப்பினராக சேர்ப்பதற்கு கொரோனா விதிமுறைகளை மீறி கட்சி நிர்வாகிகள் மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து பிரமாண்ட முறையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மேலும் சமூக இடைவெளி முக கவசங்கள் போன்ற எவ்வித விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாமல் திருமண மண்பம் உள்ளேயும் வெளியேயும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க மாநில இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் எம்.எல்.ஏவுமான பரமசிவம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பின்னர் புதிய உறுப்பினர்களிடம் இருந்து உறுப்பினர் படிவங்களை பெற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைச்சர் பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி,மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் படி, இணையவழியில் உறுப்பினர் சேர்க்கைகளை நடத்தி, மக்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கும் போராட்டங்களையும் தகுந்த சமூக இடைவெளியுடனேயே நடைபெற்றது.
ஆனால், மக்களுக்கான அரசு என வெளி வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.கவோ, கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இதுதான் தங்களின் நிலைப்பாடு என செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் செயல்பாடுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள், மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!