Tamilnadu
ஃபேஸ்புக், யூடியூபில் உலவும் ஆபாச - அவதூறு வீடியோக்கள் : "தணிக்கை வாரியம் தேவை" : ஐகோர்ட்டில் வழக்கு!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி விவகாரம், வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூ-ட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும்போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை எனவும், திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஏன் மறுதலிக்கிறீர்கள்? இதற்கு பெயர் பாகுபாடு : தீபக்நாதன்!
-
கல்லுரி மாணவிக்கு பாலியல் சீண்டல் : த.வெ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை!
-
தூயசக்தி விஜய் ஏன் மெளனமாக இருக்கிறார்? : போதைக் கும்பலுக்கு துணிச்சலைக் கொடுத்தது யார்? - முரசொலி!
-
மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!
-
வெளியானது 2027-ஆம் ஆண்டு அரசு விடுமுறைப் பட்டியல்.. இத்தனையும் சனி, ஞாயிறா? : முழுப் பட்டியல் உள்ளே!