Tamilnadu
“சிறுமி பாலியல் வன்கொடுமை” - அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் தாய் காவல் நிலத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணையைத் தொடங்கினர்.
போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமி கூறுகையில், “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய், காதலன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். எனவே, போலிஸார் அவரை தேடிவந்த நிலையில் இன்று திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக IT WING பதிலடி!
-
‘அறிவுத் திருவிழா’ - இளைஞர்களுக்கு திராவிட கொள்கை உரம் ஊட்டும் உதயநிதி : முரசொலி புகழாரம்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!