தமிழ்நாடு

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

நாகர்கோவிலை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ வழக்கு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்நிலையில், அச்சிறுமி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காதலனுடன் திருமணம் செய்ய தலைமறைவாகியது தெரியவந்தது. அவர்களை போலிஸார் மீட்டு, இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறுமியை விசாரணை செய்ய குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களது விசாரணையில், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியின் தாயார், முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசனிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தனது மகளையும் அழைந்து சென்றதாகவும், அங்கு சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேப்போன்று நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததின் பேரில், இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள்நல பாதுகாப்பு அதிகாரி புகாரளித்தார்.

புகாரின் பேரில் போக்சோ சட்டம் உட்பட 6 பிரிவுகளில் நாஞ்சில் முருகேசன் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிலநிமிட நேரங்களிலேயே நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகினார். இந்நிலையில், தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories