Tamilnadu
“கொலைவெறியில் அ.தி.மு.க; சொந்தக் கட்சிகாரர்களையே வெட்டி மண்டையை உடைத்த கொடூரம்” : பெரம்பலூரில் பரபரப்பு!
அ.தி.மு.க அரசு கொலை செய்வதிலும், கொள்ளையடிப்பதிலுமே குறிக்கோளாக உள்ளது என சமீபத்தில் வந்த இரண்டு விஷயங்கள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. ஒன்று தமிழக மக்கள் உணவில்லாமல் தவித்த வேளையில், வருவாயை ஈட்ட மதுக்கடைகளை திறந்து மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
அதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் 15 வயது மகளான ஜெயஸ்ரீ என்ற மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர் கலியபெருமாள், அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் யாருமில்லாத நேரத்தில் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்தது.
குற்றவாளிகள் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் பெரம்பலூர் அ.தி.மு.க.மாவட்டச் செயலாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்று கட்சியினரிடம் கையெழுத்து வாங்கிய அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் உள்ளிட்ட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும்- குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் என்பவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகளிடம் அ.தி.மு.க.வினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
இன்று மாலை வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை துரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மாவிலங்கை முத்துசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் வெண்பாவூர் முருகேசன், ஊராட்சி செயலாளர் சங்கரப்பன் ஆகியோர் நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள அ.தி.மு.க.வினரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரனின் ஆதரவாளர்களான அரசு வழக்கறிஞர் பாலமுருகன், ஆர்.டி.ராமச்சந்திரனின் உறவினர் கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 பேரும் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களையே கொலை வெறித்தாக்குதல் நடத்திய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!