தமிழ்நாடு

அ.தி.மு.கவினரால் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ தீ விபத்தில் பலியானதாக தமிழக அரசு செய்தி வெளியீடு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் அ.தி.மு.கவினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ, தீ விபத்தில் பலியானதாக தமிழக அரசு. செய்தி வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.கவினரால் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ தீ விபத்தில் பலியானதாக தமிழக அரசு செய்தி வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையமும், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையும் தெரிவித்தது.

இந்த ஆணையங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் நோக்கமே, ஊரடங்கில் வீட்டில் இருக்கும் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சரி செய்யும், அதிகரிக்கும் குற்றங்களையும் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் அதனைப் புரிந்துக்கொள்ளாத ஆளும் அரசுகள் ஆணையத்தின் அறிவிப்பை வெறும் அறிக்கை தகவலாக பார்த்ததன் விளைவே தமிழகத்தில் நிகழ்ந்த ஜெயஸ்ரீயின் கொடூர மரணமே.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் 15 வயது மகளான ஜெயஸ்ரீ என்ற மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர் கலியபெருமாள், அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் யாருமில்லாத நேரத்தில் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

அ.தி.மு.கவினரால் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ தீ விபத்தில் பலியானதாக தமிழக அரசு செய்தி வெளியீடு!

இதில், 95% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகு படுபாதகச் செயலில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அ.தி.மு.க-வினரின் இத்தகைய கொலைவெறிச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் தமிழக மக்கள் கொதித்துப்போயுள்ளனர்.

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்தகு கோரச் செயலைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட அ.தி.மு.க-வினருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வகைசெய்யவேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த படுபாதக செயலைச் செய்த குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க அரசு வழங்கிய அதிகபட்ச தண்டனையே கட்சியில் இருந்து நீக்கியதுதான். அதனைத் தாண்டி எந்த ஒரு உருப்படியான நடவடிகையும் இந்த அரசு செய்யவில்லை. இதனால் தமிழக மக்களின் அதிருப்திக்கு ஆளான எடப்பாடி அரசு, தற்போது செய்த ஒரு மோசமான செயலால் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

அ.தி.மு.கவினரால் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ தீ விபத்தில் பலியானதாக தமிழக அரசு செய்தி வெளியீடு!

அதாவது, அ.தி.மு.கவினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ, தீ விபத்தில் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் தீ விபத்தில் உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பெற்றோரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு யார் காரணம்? குற்றவாளிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி, தமிழக மக்களின் கோரிக்கையே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான்.

இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே உண்மைக் குற்றத்தை மறைத்து விபத்து என பதிவு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பலத்த கண்டனங்களுக்கு பின், "தீ வைக்கப்பட்டு உயிரிழந்த" என மாற்றி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூட கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்பதில் அ.தி.மு.க அரசு தெளிவாகவே இருக்கிறது.

banner

Related Stories

Related Stories