தமிழ்நாடு

“கொலைகார அ.தி.மு.க” - உண்மையை மூடி மறைக்க நினைக்கும் பா.ம.க, நா.த.க!

மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் கட்சிகள், இத்தகு நேரத்தில் கொலையாளிகளின் பின்புலத்தை மறைக்கும் செயல் பலராலும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

“கொலைகார அ.தி.மு.க” - உண்மையை மூடி மறைக்க நினைக்கும் பா.ம.க, நா.த.க!
ஓவியம் : முகிலன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர் கலியபெருமாள், அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் யாருமில்லாத நேரத்தில் ஜெயபால் என்பவரின் மகளான 16 வயது மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. 95% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தகு படுபாதகச் செயலில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அ.தி.மு.க-வினரின் இத்தகைய கொலைவெறிச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் தமிழக மக்கள் கொதித்துப்போயுள்ளனர்.

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்தகு கோரச் செயலைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட அ.தி.மு.க-வினருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வகைசெய்யவேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மனிதத்தன்மைக்குச் சவால் எழுந்திருக்கும் இந்நேரத்திலும், கொடூரத்தை நிகழ்த்தியவர்களை மக்கள் முன் மறைக்கும் செயலில் இறங்கியிருக்கின்றன பா.ம.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை.

“கொலைகார அ.தி.மு.க” - உண்மையை மூடி மறைக்க நினைக்கும் பா.ம.க, நா.த.க!

ஆளுங்கட்சி எனும் அகங்காரத்தோடும், கொடூர மனத்தோடும் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமையை குடும்பப் பகை காரணமாக நிகழ்ந்த சம்பவம் என மட்டும் சுருக்க முயன்றிருக்கிறது நாம் தமிழர் கட்சித் தலைமை.

பா.ம.க நிறுவனர் ராமதாஸும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் நிகழ்த்தியது குறித்துக் குறிப்பிடாமல், இக்கொலைச் செய்திக்கு வருந்தியுள்ளார். கொடூர மனம் கொண்டவர்களால் ஏதுமறியா மாணவி கொல்லப்பட்ட நிகழ்விலும், காரணமான அ.தி.மு.கவினர் குறித்துக் குறிப்பிடாமல் அடக்கி வாசிக்கும் இவர்கள் மீது சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் கட்சிகள், இத்தகு நேரத்தில் மக்கள் பக்கம் நின்று நீதி பெற்றுத் தர முயலாமல், கொலையாளிகளின் பக்கமே நின்று அவர்களின் பின்புலத்தை மறைக்கும் செயல் பலராலும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories