Tamilnadu
7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் அறிவிப்பு - சென்னை நிலவரம் என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள வானிலை மையம் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீ., நீலகிரி கோத்தகிரியில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மதுராந்தகம் மற்றும் நீலகிரி குன்னூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!