Sports
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான், நிஷின் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆடவர் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துள்ளது.
நிஷின் நகரில் உள்ள கோரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் 211 ரன்களை குவித்தது இந்திய அணி. இந்த ரன்களே ஆசியப் போட்டித் தொடரில் இந்திய அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
212 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்ப ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் ஹசன் நவாஸ் அபாரமாக விளையாடி நவாஸ் 51 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்டோர் முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய விளையாட்டில் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், 2026 ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இரண்டுமே தங்கம் வென்றுள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செப்டம்பர் 22 அன்று இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது.
Also Read
-
தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!