Sports

"ஏழை நாடுகளுக்கு சென்று விளையாடமுடியாது" - சேவாக்கின் கருத்தால் சர்ச்சை... முழு விவரம் என்ன ?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

எனினும் ஐபிஎல் தொடரில் வெளிநாடு வீரர்கள் ஆடுவதை போல பிறநாட்டு லீக் தொடர்களின் ஆட இந்திய வீரர்களுக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு இந்திய வீரர்கள் ஏன் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? என இந்திய முன்னாள் வீரர் சேவாக்கிடம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேவாக், "நாங்கள் பணக்காரர்கள், எனவே ஏழை நாடுகளான வெளிநாட்டுக்கு சென்று விளையாட வேண்டிய அவசியமில்லை. எனக்கு க்பேஷ் தொடரில் விளையாடுவதற்கான அழைப்பு எனக்கு வந்தது. இதற்கு சம்பளமாக 1, 00,000 டாலர்கள் தருவதாக சொன்னார்கள். ஆனால் அது நான் எனது சுற்றுலாவுக்கு பயன்படுத்தக்கூடிய பணம் என்று அவர்களிடம் சொன்னேன்"என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !