தேர்தல் 2024

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக சிறுபான்மை தலைவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக.

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். இந்த சூழலில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசியுள்ளார் மோடி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, "நமது நாட்டின் செல்வதை எல்லாம் இஸ்லாமியர்கள் எடுத்து செல்வதாகவும், அவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், இதனால் நமது சொத்துகள் அவர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) கொடுக்கப்படுகிறது" என்று இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சை பேசியுள்ளார்.

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !

மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதோடு அவர் மீது தேர்தல் ஆணையத்தில் சி.பி.ஐ (எம்), காங்கிரஸ், சி.பி.ஐ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் பலரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதோடு, மோடிக்கு எதிராக சுமார் 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் மீது புகாரும் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் இந்தியாவை தாண்டி உலக நாடுகள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மோடியின் பேச்சை உலக ஊடகங்களான CNN, நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்க்டன் போஸ்ட், அல்ஜசீரா, BBC, டைம் என பலவற்றிலும் இந்த செய்தி வெளியாகி கண்டனத்தை எழுப்பியுள்ளது. இப்படி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மானத்தை மோடி வாங்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !

இந்த நிலையில், மோடியின் இந்த கருத்தால் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியவில்லை என்று பாஜக சிறுபான்மை தலைவர் உஸ்மான் கனி என்பவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ராஜஸ்தானில் பாஜக குறைந்தது 3 - 4 தொகுதிகளில் தோல்வியை தழுவும். மோடியின் இசுலாமிய மக்கள் குறித்த பேச்சு கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர் நீக்கம் !

முஸ்லிம்கள் குறித்து மோடி பேசிய கருத்து தவறானது. மோடியின் இந்த வெறுப்பு கருத்தால் எங்களால் இஸ்லாமிய மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியவில்லை." என்று பேசியிருந்தார். இவரது பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மோடியின் பேச்சுக்கு மேலும் கண்டனங்கள் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மோடிக்கு எதிராக பேசியவரை பாஜக நீக்கம் செய்துள்ளது.

மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த சிறுபான்மை தலைவர் உஸ்மான் கனியை பாஜக ஒழுங்கு கமிட்டி நீக்கம் செய்து அறிவித்துள்ளது. இது தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories