தேர்தல் 2024

திரிபுரா தேர்தல் விவகாரம் : CPIM கோரிக்கை நிராகரிப்பு - பாஜக தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை?

திரிபுராவில் உள்ள சில தொகுதிகளில் 100%-க்கு மேல் வாக்குகள் பதிவான விவகாரம் தொடர்பாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற CPIM கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

திரிபுரா தேர்தல் விவகாரம் : CPIM கோரிக்கை நிராகரிப்பு - பாஜக தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் ஆதரவை பெற்று வருகிறது.

மேலும் தேர்தல் கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கிறது. இதனால் பயந்துபோன பாஜக வழக்கம்போல் தனது நரி தந்திரத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி பாஜக ஆளும் குஜ்ராத்தின் சூரத் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திரிபுரா தேர்தல் விவகாரம் : CPIM கோரிக்கை நிராகரிப்பு - பாஜக தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை?

தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் இதே போல் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதோடு முதற்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் கேரளாவில் வாக்குப்பதிவு மாதிரி நடைபெற்றபோது, ஒரு சில பகுதிகளில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்தலிலும் பாஜக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி வருகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக திரிபுராவில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குபதிவில் 4 வாக்குச்சாவடிகளில் 100%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த தேர்தலை ரத்து செய்து, மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் சிபிஐ(எம்) கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியது.

திரிபுரா தேர்தல் விவகாரம் : CPIM கோரிக்கை நிராகரிப்பு - பாஜக தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை?

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் தவறான முறையில் கணக்கீடு செய்ததாக கூறி மறுப்பு தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தற்போது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தேர்தல் விதிகளை மீறி செயல்படும் பாஜக தலைவர்கள் மீது இதுவரை தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மதம் சார்ந்து மட்டுமின்றி, பிரிவினையை தூண்டும் விதமாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து மோடி மீது பலரும் புகார் கொடுத்த நிலையில் கூட, தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் பாஜகவின் தில்லு முல்லுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாக இணையத்தில் பலரும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories