Sports
"மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா எந்தவித ஆதரவுமின்றி தனித்து நிற்கிறார்" - கில்கிறிஸ்ட் கருத்து !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சித்த வண்ணம் உள்ளனர். ஆனால், ரசிகர்களின் இந்த செயலுக்கு ஹர்திக் பாண்டியா எந்த எதிர்வினையையும் ஆற்றாமல் உள்ளார். அதோடு பெரும்பாலான நேரங்களில் சிரித்த முகத்துடன் வளம் வருகிறார்.
இந்த நிலையில், ஹர்த்திக் எந்தவித ஆதரவுமின்றி தனித்து நிற்கும் ஒரு ஓநாயைப் போல இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஹர்த்திக் எந்தவித ஆதரவுமின்றி தனித்து நிற்கும் ஒரு ஓநாயைப் போல இருப்பதை அவரது வார்த்தை மூலம் உணர முடிகிறது. சென்னை அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அனுபவமிக்க முன்னணி வீரர் உதவியாக இருக்கிறார். ஆனால், ஹர்த்திக்கிற்கு அதுபோன்ற ஆதரகவுகள் எதுவுமில்லை என்பதே அவரின் வார்த்தைகளில் உணர முடிகிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!