விளையாட்டு

IPL வர்ணனையாளர்களுக்கு கட்டுப்பாடு : ஒளிபரப்பு உரிமை குறித்து IPL அணி உரிமையாளர்களுக்கு BCCI அறிவுரை !

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை பிசிசிஐ வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

IPL வர்ணனையாளர்களுக்கு கட்டுப்பாடு : ஒளிபரப்பு உரிமை குறித்து IPL அணி உரிமையாளர்களுக்கு BCCI அறிவுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனங்கள் பெற்றுள்ள நிலையில், இதன் மூலம் ஒரு போட்டிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் பிசிசிஐ-க்கு வருமானம் வந்துகொண்டுள்ளது.

ஆனால், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சிலர் ஐபிஎல் போட்டிகளின் நிகழ்வுகளை இணையதளத்தில் வெளியிடுவதாக ஒளிபரப்பு நிறுவனங்கள் பிசிசிஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அதோடு கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர், ஐபிஎல் போட்டி ஒன்றை நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். இதனை அந்த நேரத்தில் மட்டுமே ஒரு மில்லியன் பேர் அதனை பார்த்துள்ளனர். இது குறித்து பிசிசிஐ சார்பில் அவருக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், அவர் அதனை நீக்கியுள்ளார்.

IPL வர்ணனையாளர்களுக்கு கட்டுப்பாடு : ஒளிபரப்பு உரிமை குறித்து IPL அணி உரிமையாளர்களுக்கு BCCI அறிவுரை !

இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் ஐபிஎல் போட்டிகளின் வீடியோகளை தனிப்பட்ட முறையில் பதிவேற்றம் செய்யக்கூடாது என பிசிசிஐ கூறியுள்ளது.

அதே நேரம் ஐபிஎல் அணிகள் போட்டி தொடர்பான புகைப்படத்தை தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை என்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஒளிபரப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை பிசிசிஐ வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories