Sports
bazball முறையின் தோல்விதான் இங்கிலாந்து தொடரை இழக்க காரணம் - இங். முன்னாள் கேப்டன் விமர்சனம் !
கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.
இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.
பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது. இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த நன்கு போட்டிகளிலும் மோசமான முறையில் ஆடி இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது.
இந்த நிலையில், bazball முறையின் தோல்விதான் இங்கிலாந்து தொடரை இழக்க காரணம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்த தொடரில் இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் மிடில் ஆர்டர் முழுக்க சரிந்ததால் இந்த தோல்வி கிடைத்துள்ளது. bazball முறையின் தோல்விதான் இங்கிலாந்து தொடரை இழக்க காரணம்
இந்திய ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தன. எனவே அது குறித்து புகார் சொல்லவே முடியாது. இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டியில் மூன்று முறை டாஸ் வென்றார்கள். ஆனாலும் தொடரை இழந்து இருக்கிறார்கள். தோல்வி குறித்து அணி சுயபரிசோதனை செய்யவேண்டும். பந்து புதியதாகவும் சுழலும் பொழுதும் பென் டக்கெட் சுழற் பந்துவீச்சாளர்களை அடிக்க நினைத்து ஆட்டமிழக்கிறார். ஒவ்வொருவரும் அவரிடம் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!