Politics
“8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் மக்களின் தூக்கத்தை கெடுத்தது யார்?” : பிரதமருக்கு சு.வெங்கடேசன் கேள்வி!
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு, எளிய உழைக்கும் மக்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட நாட்டின் 90% மக்கள் பொருளாதாரம் சார்ந்தும், கல்வி சார்ந்தும், உரிமை சார்ந்தும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
இவை, வெறுமென வெறுப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், திட்டமிட்டு சட்டமியற்றி அதன் வழி செயல்படுத்தும் ஏகாதிபத்திய அடக்குமுறை நடவடிக்கையாக அமைந்து வருகிறது.
அவ்வாறு ஒன்றிய பா.ஜ.க அரசால் அமல்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய நடவடிக்கையில், தவிர்க்க முடியாத ஒன்றாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டு மக்களை அச்சத்திலும், துயரத்திலும் ஆழ்த்திய இந்த அதிகப்படியான ஜி.எஸ்.டி வரியை, அமல்படுத்தியதே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் உணராததைபோல், மக்களுக்கான விலைவாசியை குறைத்துள்ளோம் என ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து வேடம் ஆடத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.
இதனைக் கண்டிக்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்த பிரதமர் அவர்களே, 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?
ஊடகங்களை எப்போதுமே சந்திக்க மறுக்கிற பிரதமர் தொலைக் காட்சியில் வழக்கம் போல ஒருவழி உரை...
ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் பெண்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறுவார்கள்... ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும்... எனப் பிரதமர் நமக்குப் புரியாத இந்தியில்...
இருக்கட்டும் பிரதமரே.
இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை, நடுத்தர வர்க்கத்தை வறுத்து எடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது?
நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறதாம். 8 ஆண்டுகளாக நீங்களே வறுத்து நீங்களே குலைத்து தூக்கத்தை கெடுத்து எத்தனை இரவுகளை சிவராத்திரிக்கள் ஆக்கினீர்கள். அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?
இப்பவும் வசூல் செய்கிற மொத்த ஜி. எஸ்.டி இல் நீங்கள் கொடுத்திருக்கிற சலுகை எத்தனை சதவீதம்? இத்தனை ஆண்டுகள் மக்களிடம் "கொள்ளை" அடித்து விட்டு இப்போது தரும் அற்ப சலுகைக்கு இவ்வளவு ஆரவாரமா? இந்த சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா? அதற்கு என்ன உத்தரவாதம்?
உங்க கார்ப்பரேட் நண்பர்கள் விடுவார்களா? உங்கள் கைகளில் கார்ப்பரேட் வரி விதிப்பு அதிகாரம் உள்ளதே. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா? மாநில அரசுகள் நிறைவேற்றி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிபாதிப்பு வராமல் உறுதி செய்வீர்களா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே காக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : கோவி.லெனின் பேச்சு!
-
”பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது அதிமுக” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
”கழக அரசால் போற்றப்படும் வேலுநாச்சியார்” : முரசொலி புகழாரம்!
-
"இஸ்லாமியர்களுக்கு இடர் என்றால் முதலில் துணை நிற்கும் இயக்கம் திமுகதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
"பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, இது எனக்கும் பொருந்தும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு !