Politics
ஒரே விலாசத்தில் 16 பேர்... பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி... அம்பலப்படும் தேர்தல் ஆணையம் !
பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டு விலாசத்தில் இந்து, முஸ்லீம் உள்ளிட்ட பல்வேறு வகுப்பினர் 16 பேர் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல ஏராளமான குறைபாடுகளை பீகார் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ளன.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான மறுநாள் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றும், இதற்காக புதிய புகைப்படங்களை வாக்காளர்கள் வழங்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!