Politics
வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவை பழிவாங்குகிறதா அமெரிக்கா ? - நாடாளுமன்றத்தில் திமுக MP ஆ.ராசா கேள்வி !
நடைபெற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பிக்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் திமுக எம்.பி. ஆ.ராசா அமெரிக்க இறக்குமதிகள் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எழுப்பிய கேள்வியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க இறக்குமதிகள் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதிகள் மீதான வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் தருமாறு கூறியுள்ளார்.
மேலும், வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க அமெரிக்கா நிர்ணயம் செய்திருந்த காலக்கெடு என்ன என்றும் , இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட ஆட்டோமொபைல்கள் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி மீதான வரிகளை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்திருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு GATT கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், WTO-வில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்ததா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? அமெரிக்கா பழிவாங்கும் நோக்கில் அபராதங்கள் விதித்து சலுகைகளை நிறுத்துமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!
-
பூந்தமல்லி- போரூர்– வடபழனி மெட்ரோ வழித்தடம் சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்: மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசு தொடர்ந்து தோல்வி : தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய விமானத் தொழிற்சாலை நாக்பூருக்கு சென்றது!
-
“இப்போது சொல்லி என்ன பயன்? ; சதிகரமான தேர்தல்கள்தான் நடந்து முடிந்து விட்டதே” : முரசொலி!