அரசியல்

பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!

பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதில் ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்டவரை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின.

முதலில் இதனை மறுத்த ஒன்றிய அரசு, பின்னர் வேறு வழியின்றி பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா , "பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியாக அமைந்துள்ளது. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் G7,G20 போன்ற அமைப்பின் நாடுகள் குறைந்த பட்சம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மோதலை அமெரிக்கா நிறுத்தியதாக கூறியது வெட்ககேடானது. இது குறித்து மோடி இன்றும் விளக்கமளிக்கவில்லை.

பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!

திமுக எப்போதும் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கட்சியாக இருக்கிறது. ஒரு காலத்தில் திமுக தனி தமிழ்நாடு கோரியது. ஆனால் போர் சூழலில் நாட்டின் நன்மைக்காக அந்த நிலைப்பாட்டை திமுக மாற்றிக்கொண்டது. கார்கில் போர் சூழலில் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி வழங்கியது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே முதல்முறையாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில்பாதுகாப்பு துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசிய பேச்சில் பெருமை மட்டுமே இருந்தது, கருத்து இல்லை. எதற்கெடுத்தாலும் நேரு, இந்தியா காந்தி மீது குற்றம் சொல்வதையே இவர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் "என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories