Politics
"ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்" - ராகுல் காந்தி காட்டம் !
கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து நேற்று காலை புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலானது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
மெயின் லயனில் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென அங்கேயுள்ள லூப் லைனுக்கு மாறிய நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்பிறமாக மோதியதால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான பாக்மதி விரைவு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 7 பெட்டிகள் தண்டவாளத்திற்கு குறுக்கே தடம்புரண்டன. அதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை தாண்டி தரம்புரண்டுள்ளன. ஏற்கனவே இந்தியா முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள ரயில் விபத்துகளால் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, " ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது.
இது போல ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் அதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?" என்று கூறியுள்ளார்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !