Politics
ஐகோர்ட்டை திட்டிய விவகாரம்: முன் ஜாமின் மனு தள்ளுபடி - விரைவில் கைதாகிறாரா எச்.ராஜா?
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் H.ராஜா மனு.
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.
கடந்த 2018ம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்ற பத்திரிக்கையில் என்னை தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. எச் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டது. எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் இந்த வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க எங்களது தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதற்கான எதிர்மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கில் எதிர் மனுதாரர் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது தமிழ்நாடு முழுவதும் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். இதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் எச். ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மனுதாரர் அவதூறாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு எச்.ராஜா நேரில் ஆஜராக ஆணையிட்டார். மேலும் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரத்தில் விரைவில் எச்.ராஜா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!