அரசியல்

சாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று!

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ள, எச்.ராஜாவின் க்ரைம் ரேட் அடுத்தடுத்த ஆண்டுகளின் ஒரே நாளில் கூடிய தினம் இன்று (செப்டம்பர் 16)

சாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சி கர்நாடகா நீங்கலாக தென்னிந்தியாவின் எந்த மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் தங்களது காலடியை எடுத்து வைக்க அரும்பாடுபட்டு வருகிறது. எப்படியாவது சூழ்ச்சி புரிந்து எந்த துறையிலாவது உட்புகுந்துவிடலாம் என பல ஆண்டுகளாக மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது.

அதன்படி, நட்சத்திர அந்தஸ்து கொண்ட உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது என பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு இறுதியில் மண்ணைக் கவ்வுவதே பா.ஜ.கவின் வாடிக்கை. மேலும், ‘வரலாற்றில் இன்று’ என சாதனைப்புரிந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் நினைவலைகள் இருக்கும். ஆனால், பா.ஜ.கவினருக்கோ வரலாற்றில் இன்று என்ற நாள் குற்றச்செயல்களில், முறைகேடுகளில், சூழ்ச்சிகளில் ஈடுபட்டு சர்ச்சைகளை கிளப்பியதற்காகவே இருந்திருக்கிறது.

அவ்வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ள, எச்.ராஜாவின் க்ரைம் ரேட் அடுத்தடுத்த ஆண்டுகளின் ஒரே நாளில் கூடிய தினம் இன்று (செப்டம்பர் 16)

சாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று!

சம்பவம் ஒன்று : சாரணர் இயக்கத் தேர்தலில் தோல்வி

2017ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவர், துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், பயிற்சியாளர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக பா.ஜ.கவின் எச்.ராஜாவும், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் மணி ஆகியோரும் போட்டியிட்டனர். அதில், எச்.ராஜாவை 180 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மணி வீழ்த்தி தலைவர் பதவியை வென்றார். அவர் பெற்றிருந்த வாக்குகள் 232.

மத்திய மாநில அரசுகளின் செல்வாக்கு என பல்வேறு அந்தஸ்துகள் இருந்தும் எச்.ராஜா பெற்றதோ வெறும் 52 வாக்குகளே. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், இது முறைகேடாக நடந்த வாக்குப்பதிவு, ஆகவே மறுத்தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறி சர்ச்சையை கிளப்பினார் எச்.ராஜா.

உண்மையில், முறைகேட்டில் ஈடுபட்டது என்னவோ பா.ஜ.கவினர்தான். சாரணர் இயக்கத்தில் எப்படியாவது ஆர்.எஸ்.எஸ்வாதிகளை புகுத்திடவேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் எச்.ராஜா தரப்பு ஈடுபட்டது என சாரணர், சாரணியர் இயக்க ஆசிரியர்களே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இரண்டு : நீதிமன்றம், காவல்துறையை அவதூறாக பேசியது

2018ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதற்காக அன்று மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதுபோல, புதுக்கோட்டை மெய்யபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக மேடை அமைக்க பாஜக தரப்பு அனுமதி கேட்டிருந்தது.

ஆனால், போலிஸார் அனுமதியளிக்க மறுப்பு தெரித்திருக்கிறார்கள். அங்கு விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, மேடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நீதிமன்ற உத்தரவுபடியே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என போலிஸார் கூற, அதற்கு எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசி, காவல்துறை ஒரு ஊழல் துறை என்றெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த அவதூறு பேச்சுகள் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் மீது வழக்குப்பதிவுவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரு சம்பவங்களும், “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” ஆகிவிட முடியாது என்ற சொற்றொடருக்கு தகுந்த சாட்சியாகவே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைந்திருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

banner

Related Stories

Related Stories