Politics
முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார்: கடுமையான ஆட்சேபம் எழுந்ததால் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16ஆம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது
காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. அதேபோல புகார் தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!
-
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர் : முழு விவரம் உள்ளே!
-
மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி? : DMK IT Wing கேள்வி!
-
“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !
-
“தேவர் திருமகனாரின் புகழ் வாழ்க...” : பசும்பொன்னில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!