Politics
‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி - அதிரடி கைது
தமிழகத்தில் தாமரையை மலர்ந்தே தீரும் எனக் கங்கனம் கட்டி அதிமுகவின் எலும்பில்லாத முதுகின் மீது ஏறி சவாரி செய்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் வென்றிருக்கிறது.
வெறும் 4 நான்கு இடங்களில் அதுவும் அதிமுகவின் துணையோடு வென்றுவிட்டு சுயமாக நின்று மக்களிடம் தங்களின் ஒன்றிய அரசு செய்த சாதனைகளை கூறி வாக்குப் பெற்றதாக கூப்பாடுக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.
இது ஒருபுறம் இருக்க , தஞ்சை பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் பதிவு ஒன்றினை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் அனைவருக்கும் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸின் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதனையடுத்து ஆடிப்போன அந்த பாஜக இளைஞரணி நிர்வாகி தமிழன் பிரன்னாவுக்கு பதில் ஷாநவாஸ் என குறிப்பிட்டுவிட்டேன், அதேபோல கொலை மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை” என பதுங்கியிருக்கிறார்.
இந்த விவகாரம் பூதாகரமாக அந்த பாஜக நிர்வாகி மீது மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்து நள்ளிரவில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!