தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 14 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கை எட்டியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்ததாகவும், அதன்பிறகு தற்போதுதான் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என்றார்.
தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முதலமைச்சரின் கடின உழைப்பே காரணம் என்று கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க ஒன்றிய அரசு மறுப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நான்காயிரம் கோடியில் 450 கோடி ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், ”குடிக்கக்கூடிய தண்ணீருக்கான நிதியைக்கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.3,407 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
ஒன்றிய அரசு 2024-2025-ஆம் நிதியாண்டில்ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 புதிய அதிவேக தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்தது. அதில் 3 பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய தேசிய நெடுஞ்சாலை கூட அறிவிக்கவில்லை. எட்டில் ஒரு சாலையை தென் மாநிலங்களுக்கு கொடுத்தால் என்ன?” என ஒன்றிய அமைச்சர் கேள்வி எழுப்பினார்.