jallikattu
களைகட்டிய உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி : 1200 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்பு !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்டது
இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.மூன்றாவதாக வலசை தாய் கிராம நொண்டி கருப்புசாமி கோவில் காளை அவிழ்க்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் உதயநிதி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் கலந்துகொள்ளவுள்ளனர். போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் வந்துள்ளன.
இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவதுஇடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளையி உரிமையாளருக்கும் ஒரு பைக் பரிசாக வழங்கப்படவுள்ளது.
Also Read
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!