அரசியல்

”முழுமை பெறாத ராமர் கோவிலுக்கு அரசியல் காரணத்துக்காக கும்பாபிஷேக விழா” - ராகுல் காந்தி விமர்சனம் !

ராமர் கோவில் திறப்புவிழாவில் காங்கிரஸ் கலந்துகொள்ளாத காரணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

”முழுமை பெறாத ராமர் கோவிலுக்கு அரசியல் காரணத்துக்காக கும்பாபிஷேக விழா” - ராகுல் காந்தி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டன.

இதற்கிடையில், ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா? என பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி, கூறியிருந்தார். மேலும் ராமர் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உத்தரகாட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி சாஸ்திரங்களுக்கு எதிராக புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது எனக் கூறியதோடு சங்கராச்சாரியாக்கள் யாரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்தனர்.

”முழுமை பெறாத ராமர் கோவிலுக்கு அரசியல் காரணத்துக்காக கும்பாபிஷேக விழா” - ராகுல் காந்தி விமர்சனம் !

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்புவிழாவில் காங்கிரஸ் கலந்துகொள்ளாத காரணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். யோடோ நீதி யாத்திரை பயணத்தின் போது பேசிய அவர், ”ராமர் கோயில் கும்பாபிஷேக விழா முழுவதும் அரசியல் நிகழ்வாக உள்ளது. இதை ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை அப்படித்தான் கட்டமைத்துள்ளன.

இந்து மதத்தின் முக்கியமான சங்கராச்சாரியார்களே இதனை புறக்கணித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மோடி, ஆர்.எஸ்.எஸ் ஆகியோரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் நிகழ்விற்கு வருவது சாத்தியமே இல்லை. முழுமை பெறாத ஒரு கோயிலில் அரசியலுக்காக அவசர கதியில் கும்பாபிஷேக விழாவை நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்கிறது”என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories