India
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் : 35.5 லட்சம் பேரை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு!
பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவு பெற உள்ள நிலையில் பீகார் வாக்காளர்கள் 7 கோடியே 89 லட்சம் பேரில் 6 கோடியே 60 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்.
தீவிர திருத்தத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதிக்கு முன்பு கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்கப்படாத பெயர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது. இதுவரை கொடுத்த மனுக்கள் அடிப்படையில் பீகார் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து 35 லட்சத்து 5 ஆயிரம் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது.
இறந்து விட்ட 1 புள்ளி 59 சதவீத வாக்காளர்கள் 12 புள்ளி 5 லட்சம் பேர், பீகாரில் இருந்து இடம் பெயர்ந்த 2 புள்ளி 2 சதவீதம் பேரும், அதாவது 17 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்கள் ஆவர். 0.73 சதவீதம் பேர், அதாவது சுமார் 5 லட்சத்து 5 ஆயிரம் பேர் இரண்டு முறை பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த கண்டுபிடிப்புகள் பீகாரின் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 35 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!