India
ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் : இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் சொல்லும் ஆலோசனை என்ன?
உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட வாக்கப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்னும் ஜூன் 1 ஆம் தேதி 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 4 ஆம் தேதி7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.
இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி என மும்முனைபோட்டி நிலவுகிறது. இருப்பினும் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அகிலேஷ், ” நிதி மோசடிகளை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. பின்னர் எதற்கு CBI?. அனைத்து மாநிலங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் பா.ஜ.க எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக மட்டுமே ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.தேர்தல் பத்திரங்கள் மூலும் மிகப்பெரிய ஊழலை பா.ஜ.க செய்துள்ளது. ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க கட்சிக்கு நன்கொடை பெற்றுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது என்ன தவறு நடந்தது?. இது குறித்து ஏன் ED,CBI விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. அப்போது பலர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் ED,CBI விசாரணை அமைப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இந்த விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும். இதை இந்தியா கூட்டணிக்கு முன்மொழிகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்.. அதிகார அத்துமீறலில் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டிற்கு வந்து மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க முதலமைச்சர் : தமிழச்சி தங்கபாண்டியன் MP ஆவேசம்!
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
ஜானகி அம்மையார் மீது இப்போது என்ன திடீர் பாசம்? : பழனிசாமியின் வேஷத்தைக் கலைத்த முரசொலி!
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!