இந்தியா

பாஜகவின் கொச்சையான விளம்பரங்களை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது : கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம்!

பா.ஜ.கவின் இழிவான விளம்பரங்களை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கொச்சையான விளம்பரங்களை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது : கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கொச்சையாக விமர்சிக்கும் வகையில் பா.ஜ.க தேர்தல் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இதை கண்டித்து, பா.ஜ.கவின் அவதூறு விளம்பரத்திற்கு தடை விதிக்க கோரியும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரணைக்கு வந்தது. அப்போது, "பா.ஜ.கவின் விளம்பரங்கள் இழிவானவை. எதிர்க்கட்சி வேட்பாளர்கள், கட்சிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தும் நோக்கத்துடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்திற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் பா.ஜ.கவின் விளம்பரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories