அரசியல்

பா.ஜ.க.விற்கு எதிராக ஆதாரங்கள் குவிந்தாலும், நடவடிக்கைகளில் மந்தமே : தேர்தல் ஆணையத்தின் ஏளன போக்கு!

பலவகையான தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும், பல்வேறு மோசடிகள் அப்பட்டமாக அம்பலமாகி வரும் நிலையிலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மட்டும் பின்னோக்கியே செல்கிறது.

பா.ஜ.க.விற்கு எதிராக ஆதாரங்கள் குவிந்தாலும், நடவடிக்கைகளில் மந்தமே : தேர்தல் ஆணையத்தின் ஏளன போக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த காலங்களில் தலைமை பொறுப்பு வகித்த தேர்தல் ஆணையர்களே, தற்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகளை விமர்சிக்கும் அளவிற்கு, தேர்தலின் போது பல்வேறு வகையான அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகின்றன.

குழந்தைகளாலும், வில்லத்தனமான ஆட்களாலும், வாக்கு இயந்திரங்கள், விளையாட்டுப் பொறிகளாக கையாளப்படுகின்றன.

ஆளும் கட்சி என்ற ஒற்றை காரணத்திற்காக, தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற மனநிலையை எட்டியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

அதன் ஒரு பகுதியாகவே, பா.ஜ.க நிர்வாகிகள், தனது சிறுவயது மகன்களை, வாக்குச்சாவடிக்குள் கூட்டி சென்று வாக்களிக்க வைப்பது; 16 வயது சிறுவன் தானாகவே மற்றவர் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க வேட்பாளருக்கு 8 முறை கள்ளத்தனமாக வாக்களிப்பது;

வாக்களிக்க உதவுகிறேன் என இயலாதவர்களை கூட்டிச்சென்று, வாக்காளர்கள் விருப்பத்திற்கு மாற்றாக பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது; வாக்குச்சாவடிகளை சூறையாடுவது; சிறுபான்மையினர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது; வாக்கு இயந்திரங்களுக்கு வழிபாடு செய்வது
என ஜனநாயகத்தை சீரழிக்கின்ற அனைத்து செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருகிறது.

பா.ஜ.க.விற்கு எதிராக ஆதாரங்கள் குவிந்தாலும், நடவடிக்கைகளில் மந்தமே : தேர்தல் ஆணையத்தின் ஏளன போக்கு!

இவை அம்பலப்பட காரணமாய் இருப்பது கூட, குற்றம் செய்தவர்களாக தான் இருக்கின்றனர். ஏனென்றால், குற்றம் செய்து சிக்கியவர்கள் அனைவரும், தாங்கள் செய்ததை தாங்களே காணொளியாக படம் பிடித்து, இணையத்தில் பீத்திக் கொள்ள நினைத்தவர்கள்.

இதனால், விளம்பரப்படாத குற்றங்கள் எத்தனை அரங்கேறியிருக்கிறதோ என்ற கேள்வியும் வெகுவாக பெருகத்தொடங்கியுள்ளது.

அவ்வாறு கேள்விகள் பெருகும் வகையில் தான், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. அதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத்துவ அழுத்தமும் பல வகையில் காரணம்.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும், நீட் நுழைவுத் தேர்விற்கே, சோதனை என்கிற வகையில், பல அரக்கத்தனங்கள் காணப்படுகிற நாட்டில்,

தேர்தலின் போது, 18 வயது கூட நிறைவுறாத பலரை வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் அனுமதிப்பது, கடும் பேச்சுப்பொருளாகியுள்ளது.

இதற்கு, தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ.எம், சி.பி.ஐ, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி என அதிகாரத்துவம் வாய்ந்த கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும்,

ஒன்றியத்தில் ஆட்சிபுரிந்து வரும் பா.ஜ.க, ஒற்றை நேரத்தில் பல சிக்கல்களை உண்டாக்கி, ஒரு சிக்கலுக்கு, மற்றொரு சிக்கல் என தீர்வு கண்டு வருவதும், அவை அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் மறைமுகமாக துணை போவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இன்று (20.05.24) நடந்து முடிந்துள்ள, 5ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவும் விலக்கல்ல என்பது, உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய சிக்கல்கள் வழி உறுதியாகியுள்ளது.

அவ்வகையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, சிக்கல்களும் தொடங்கின. அதற்கு எடுத்துக்காட்டுகளே,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில், சுமார் 43 வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, 3 மணிநேரத்திற்கும் மேல் மக்கள் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

அதே தொகுதியில் அமைந்துள்ள 312ஆவது வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வினர் கும்பலாக சென்று, காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவரை வெளியேற்றிய புகாரும் எழுந்தது.

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் பகுதியில், சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க சென்றபோது, தனக்கு உதவுவதாக கூறி, பா.ஜ.க சின்னத்தில் வாக்களித்ததாக பெண் வாக்காளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மும்பையில், 2000 வாக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு இயந்திரமே இருந்ததால், 2 - 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய சூழல் உருவானது
ஆகியவை.

இந்த குளறுபடிகள் அனைத்தும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகமுள்ள இடங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால், தனக்கு சாதகமான பல செயல்களை செய்து வரும் பா.ஜ.க.விற்கு கண்டனங்கள் குவிந்து வருவதோடு, தேர்தல் ஆணையத்திற்கும் அதற்கிணையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories