India
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்வல் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கூட.
இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.கவும் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறார்கள். இங்கு ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். கடும் எதிர்ப்புகள் எழுந்து வருவதை அடுத்து, "பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க மகளிருக்கு ஆதரவாக இருக்கும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். தற்போது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் இப்படியான ஒரு கருத்தை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியிலிருந்து ரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!
-
“Airport-ஐ தனியாருக்கு கொடுத்துடுங்க..”- TN Budget அன்றே மோடிக்கு கடிதம்.. கிழிந்த விஜயின் முகத்திரை!
-
பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!
-
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!