இந்தியா

எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

மக்களவை தேர்தல் நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பிரிஜ்வல் ரேவண்ணா MPயின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்வல் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கூட.

இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும், பா.ஜ.கவும் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறார்கள். இங்கு ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை தன்னை பிரிஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பிரிஜ்வல் ரேவண்ணா மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பாரா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும், மாதர் சங்கங்க தலைவர்களும் பிரஜ்வல் ரேவண்ணா கொடூரமான செயலுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரஜ்வல் ரேவண்ணாவின் விவகாரம் முன்பே பிரதமர் மோடிக்குத் தெரிந்து அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.கவைச் சேர்ந்த தேவராஜ் கவுடா, கடந்த டிசம்பர் மாதமே, பிரஜ்வல் ரேவண்ணா குறித்து பிரதமர் மோடிக்கும், அமிஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அமிஷா பிரச்சாரத்திற்கு வரும் போதும், பாஜக நிர்வாகிகள் அவரிடம் இது குறித்து விளக்கக் கூறியுள்ளனர்.

அதோடு, ரஜ்வல் ரேவண்ணா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இருத்தும் மோடி ஹாசன் தொகுதியில் ரஜ்வல் ரேவண்ணா போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல்,”ரேவண்ணாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கர்நாடகாவை வலுப்படுத்தும்” என அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது மோடி பேசியுள்ளார்.

இது தான் மோடி பெண்களைப் பாதுகாக்கும் லட்சணமா என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories