India
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி 94 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடி வருகிறது.
குறிப்பாகப் பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி காங்கிரஸ் என்று மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ராகுல் காந்தி ஏன் இஸ்லாமிய மன்னர்களை விமர்சிக்கவில்லை என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் பா.ஜ.க குறித்து வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சி போலியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டையும் மோடி வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டிற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அதில், “போலி வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் மக்களை பிளவு செய்வதில் பாஜகவுக்கு நிபுணத்துவம் உள்ளது. எங்களின் நற்பெயரைக் கெடுக்க நீங்கள் என்ன வேலை செய்தாலும், அதை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. மோடி விரக்தியில் பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!