இந்தியா

தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!

திரிபுராவில் தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஏப்.26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாக்பாசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

அப்போது அங்கு வந்த வடக்கு திரிபுரா பா.ஜ.க மாவட்ட தலைவர் காஜல் தாஸ், வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் அதிகாரியை காஜல் தாஸ் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து பா.ஜ.க தலைவர் காஜல் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

banner

Related Stories

Related Stories