இந்தியா

மணிப்பூர் - பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரம் :CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் - பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரம் :CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் மெய்தெய், குகி சமூகத்திற்கு இடையே வன்முறை வெடித்தது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை கலமாகவே இருந்தது.

இந்த வன்முறையைத் தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. மேலும் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்தார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மக்களை ஒருமுறைகூட சந்திக்காமல், மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். மேலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அதேபோல் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மனசாட்சியற்ற கொடூர சம்பவத்திற்கு உலக நாடுகளே கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் CBI தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், மெய்தெய் பிரிவினர் குகி சமூகத்தினரின் சில வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அதன்பிறகு கிராமத் தலைவர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட போது, ஒரு பிரிவினர் தேவாலயம் ஒன்றிற்கு திடீரென தீ வைத்துள்ளனர். இதனால் பதட்டம் அதிகமாகி மேலும் வன்முறை வெடித்தது. அப்போது காட்டுக்குள் தப்பிச்சென்ற ஒரு குடும்பத்தைக் கும்பல் துரத்திச் சென்றது. அந்த குடும்பத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் சாலையில் நின்றிருந்த போலீஸ் வாகனத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த போலிஸாரிடம் தங்களைக் காப்பாற்றும்படி கூறியுள்ளனர். மேலும் தங்களை வன்முறை கும்பல் துரத்தி வருவதாகவும், போலிஸார் வாகனத்தில் தங்களை ஏற்றிச் செல்லும்படியும் மன்றாடியுள்ளனர். இருந்தும் போலிஸார் தங்களிடம் வாகனத்திற்கான சாவி இல்லை என அலட்சியமாகக் கூறியுள்ளனர். பிறகு அந்த வன்முறை கும்பல் 4 பேரையும் பிடித்துள்ளது. அப்போது அங்கு 5 காவல்கள் இருந்துள்ளனர். பின்னர் தான் அந்த கும்பல் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories